வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு செயன்முறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்புப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு சேவைகள்
குறித்த சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கொன்சியூலர் விவகாரப் பிரிவின் ஏனைய அனைத்து சேவைகளும் தொடர்ந்தும் வழங்கப்படும்.

தொலைபேசி இலக்கங்கள்

வருகை தரும் சேவை நாடுநர்கள் மேலதிக விவரங்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொன்சியூலர் விவகாரப் பிரிவு, கொழும்பு 01 – 0112338812/ 0112338843

பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் – 0212215970

பிராந்திய அலுவலகம், திருகோணமலை – 0262223182

பிராந்திய அலுவலகம், கண்டி – 0812384410

பிராந்திய அலுவலகம், குருநாகல் – 0372225941

பிராந்திய அலுவலகம், மாத்தறை – 0412226697

Recommended For You

About the Author: webeditor