ரவி செனவிரத்னவிற்கு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு!

ரவி செனவிரத்னவிற்கு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

வாகன விபத்து சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பை கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதன்படி இன்று இந்த மனு எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்றம் அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது

பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்த பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிஸ்னா வர்ணகுல, இந்த மனு உச்ச நீதிமன்ற விதிகளுக்கு அமைவாக தாக்கல் செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

இன்னிலையில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, எதிர்மனுதாரர் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை ஏற்று மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்மானித்தது.

மேலும் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், வெள்ளவத்தை பொலிஸ் நிலைய கட்டளைத் அதிகாரி மற்றும் அதிகாரிகள் குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin