சீரற்ற காலநிலையால் டெங்கின் தாக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 41,591 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 17,686 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதும் இம்மாகாணத்திலேயே ஆகும்.
வடக்கு மாகாணத்தில் 4,836 நோயாளர்களும் மத்திய மாகாணத்தில் 4,347 நோயாளர்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 4,207 நோயாளர்களும் தென் மாகாணத்தில் 3,208 நோயாளர்களும் வட மேல் மாகாணத்தில் 2,703 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
அதிகளவாக கொழும்பு மாவட்டத்தில் 10,460 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin