தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் அரியநேத்திரன் விளக்கம்

ஜனாதிபதி தேர்தலுக்கான கணக்கறிக்கையை எனது கையொப்பத்துடன் தேர்தல் ஆணையத்தில் கடந்த 14 ஆம் திகதியே கையளித்து விட்டேன் என கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் கணக்கறிக்கைக்கான விமர்சனம் தொடர்பில் அரியநேத்திரன் விளக்கம் | Arianethran Explanation Criticism Election Calcul
“கடந்த ஜனாதிபதி தேர்தலிலே சுயேட்சை வேட்பாளராக சங்கு சின்னத்தில் நான் போட்டியிட்டு ஏறக்குறைய 2 இலட்சத்து 26 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தேன்.

உண்மை என்னவெனில் எனது கணக்கறிக்கை சரியான முறையில் தயாரிக்கப்பட்டு நான் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சைக்கு குழுவில் போட்டியிடுவதற்கான முகவராக நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவரின் மூலம் எனது கையொப்பத்துடன் குறிப்பிட்ட செலவறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் கடந்த 14 ஆம் திகதி நேரடியாகவே கையளித்திருந்தார்.

Recommended For You

About the Author: admin