சுரண்டியவற்றை பறிக்க புதிய அமைச்சாம்!

இலங்கையில் அரசியல்வாதிகள் அல்லது பிற நபர்களால் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் உடைமைகளை பறிமுதல் செய்தல் என்பனவற்றுக்காக புதிய அரச நிறுவனத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது

சொத்து மறுசீரமைப்பு அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு உலகின் பல வளர்ந்த நாடுகளில் செயற்படும் அமைப்பாகும்.

வெளிநாட்டில் அல்லது நாட்டுக்குள் இடம்பெறும் பணமோசடி மற்றும் பிற சொத்துக்களில் இருந்து பெறப்பட்ட முறைகேடான ஆதாயங்கள் அல்லது பணத்தைக் கண்டறிந்து, அதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

குறிப்பாக, அரசாங்கத்துக்கு ஏற்கனவே கிடைத்துள்ள சட்டவிரோத கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் பல இரகசிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள்

Recommended For You

About the Author: admin