இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பெற்றோல் நிரப்பு நிலையங்கள் மூலம் பெறப்பட வேண்டிய 3500 கோடி ரூபாய்க்கு குறிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்க்கு பெறப்படவேண்டிய 3500 கோடி ரூபாவினை பெற்றோல்நிரப்பு நிலையங்களில் இருந்து பெற்று அதன் மூலம் மக்களுக்கு நண்மை தரக்கூடிய விலை குறைப்பு போன்ற நிவாரண வெலை திட்டங்களை செய்ய தற்போதைய அரசினால் முயற்;சித்துள்ளது.
எனினும் பெற்றோல் கூட்டுதாபனத்தில் உள்ள முன்னால் அரசியல்வாதிகளின் குழுவினர் மூலம் குறித்த கடனை அரசினால் பெற முற்படும்போது பெற்றோல் நிரப்பு நிலையங்களினால் கூட்டுத்தாபனத்திலிருந்து பெற்றோல் கொள்வனவினை நிறுத்தி நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு வருவது போல் காட்டி பொதுத்தேர்தலை திசை திருப்பும் வண்ணம் செயற்படுவதாக கூட்டுத்தாபணத்தின் உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடன் செலுத்தவேண்டிய அதிக பெற்றோல் நிரப்பு நிறுவனங்கள் அரசியல்வாதிகளின் நிறுவனங்கள் என்பது குறிப்பிட தக்கது அத்துடன் இந்த 3500 கோடி கடனில் 1500 கோடி ரூபாவினை அறவிட முடியா கடனாக கழித்து விடுவதற்கும் முன்னால் பெற்றோலிய துறை அமைச்சர் காஞ்சன அமைச்சரவை பத்திரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளதோடு அந்த பத்திரம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள்