கடந்த பொதுத் தேர்தலில் புத்தளத்தில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு 33 வருடங்களின் பின்னர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அது புத்தளத்தின் வெற்றி எனவும் இஷாம் மரிக்கார் தெரிவித்தார்.
அத்தோடு இம்முறை பொதுத் தேர்தலில் அந்த கூட்டணியை ஒன்றிணைய விடாமல் தடுத்தவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
33 வருடங்களின் பின்னர் கடந்த முறை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரை என்பது வரலாற்று வெற்றி எனவும் ஆனால் அந்த கதிரையில் அமர்ந்தவர் பிரச்சினைக்குரியவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இம்முறை அந்த கதிரை பாதுகாக்கப்பட வேண்டிய கடமை என புத்தள மக்களுக்கு நினைவூட்டுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே புத்தள மக்கள் சுதந்திரமாக முடிவெடுக்க எந்த காரணம் கொண்டும் ஹக்கீமிடம் அல்லது ரிஷாதிடம் முடிவெடுக்க வேண்டிய எந்த தேவையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இம்முறை புத்தள மக்கள் சிந்தித்து தனக்கு வாக்களிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.