தீவிர அரசியலிலிருத்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கெஹலிய!

தீவிர அரசியலிலிருத்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கெஹலிய!

கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தீவிர அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்

கண்டியில் இன்று (13) நடைபெற்ற தனது அரசியல் நிலைப்பாடு குறித்து கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கும் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், தான் அரசியல் அனாதை இல்லை. அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தாலும் மக்களின் ஆதரவு அப்படியே உள்ளது என்றார்.

ஒரு தொழிலதிபராக சம்பாதிக்கும் பணத்தை விட அரசியலில் ஈடுபட்டு பெறப்படும் மக்களின் அன்பு மதிப்புமிக்கது என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், நிரபராதியாக அரசியலுக்கு வருவேன் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

“சுமார் 31 ஆண்டுகளுக்கு முன்பு, நான் தற்செயலாக அரசியல்வாதியானேன். எனது தாத்தா பண்டாரநாயக்காவின் செனட்டில் இருந்தார். பண்டாரநாயக்கா என்னை கெஹலிய என்று அழைத்தார். எனக்கு தீவிர அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை. நான் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர்”.

“அரசியல் செய்கிறோமோ இல்லையோ, உங்களுக்கு உதவ வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தயக்கமின்றி என்னுடன் பேசுங்கள், நான் இருக்கிறேன். இது வெற்று வார்த்தைகளால் சொல்லப்பட்ட ஒன்றல்ல, இது இதயத்திலிருந்து கூறப்பட்டது”.

கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர் மற்றும் சுற்றாடல் அமைச்சர் உட்பட பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin