ஜனநாயக ஐக்கிய முன்னணி நாடு முழுவதும் தனித்துப்போட்டி!

ஜனநாயக ஐக்கிய முன்னணி இரட்டை இலைச் சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப்போட்டியிட முடிவு செய்துள்ளது.

கடந்த காலங்களில் ஊழல் மற்றும் மோசடி சம்பவங்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் போட்டியிடும் கட்சிகளுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று ஜனநாயக ஐக்கிய முன்னணியின் புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள், அரசியல் விற்பன்னர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருந்தனர்.

அதனடிப்படையில் மாற்றத்திற்கான அரசியல் பண்பாட்டை வெளிக்காட்டும், புதியதொரு அரசியல் கலாசாரத்தின் ஆரம்ப நகர்வாக கட்சி முக்கியஸ்தர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் பொதுத் தேர்தலில் தனித்துப்போட்டியிடும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்முறை பல மாவட்டங்களில் இக்கட்சி தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய செயற்பாட்டாளர்களாக இருந்து, அக்கட்சிகளின் முக்கியஸ்தர்களின் ஊழல், மோசடிகள் காரணமாக அதிருப்தியுற்று விலகியிருந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும் ஜனநாயக ஐக்கிய முன்னணியில் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளார்கள்.

Recommended For You

About the Author: admin