இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை வழங்குவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனையில், கடசியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் நியதிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான டினால் பிலிப், நளின் திஸாநாயக்க மற்றும் ஜெயநாதா ஆகியோர் உறுப்பினர்களாவர்.
அந்தக் குழுவின் அறிக்கையை உடனடியாக கட்சியின் வேட்புமனு குழுவிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.