2024ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மைக்ரோ ஆர்.என்.ஏ.வை கண்டுபிடித்தமை, மரபணு முறையில் அதன் பங்கு குறித்த ஆராய்ச்சிக்காக அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.
இவர்கள் இருவரது கண்டுபிடிப்பானது, “உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதற்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நிரூபிக்கிறது” என நோபல் சபை கூறியுள்ளது.
அதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இயற்பியலுக்கான நோபல் பரிசு, புதன்கிழமை வேதியியலுக்கான நோபல் பரிசு, வியாழக்கிழமை இலக்கியத்துக்கான நோபல் பரிசு, வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசும் எதிர்வரும் 14ஆம் திகதி பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.