இலங்கையின் சுற்றுலாத் துறையில் சில தளர்வுகள் இருந்தபோதிலும் கடந்த செப்டெம்பர் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வருவாய் ஆகிய இரண்டிலும் இலங்கை முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாத் துறையின் மூலம் இலங்கை 181.0 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 152.2 மில்லியன் அமெரிக்க டொலர்களே வருவாயாக ஈட்டப்பட்டது.
எவ்வாறாயினும் ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததனால் செப்டெம்பர் மாதத்தில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைவடைந்தது.
சுற்றுலா வர்த்தகத்தின் கடந்த ஒன்பது மாத மொத்த வருவாயை 2348.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக கொண்டு வந்தது. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 61.2 சதவீதம் அதிகமாகும்.
கடந்த செப்டெம்பர் மாதத்தில் மட்டும் இலங்கை 122.140 சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பெற்றது. இது சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு 111.938 ஆக இருந்தது.
இருப்பினும் முதல் ஒன்பது மாதங்களில் 1.5 மில்லியனுக்கும் குறைவானவர்களையே நாட்டுக்கு கொண்டு வந்தது.
2024 ஆம் ஆண்டில் 2.0 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதை இலங்கை நோக்காகக் கொண்டுள்ளது. அதன்படி வருடம் முழுதுவம் 3.0 முதல் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் வருமானம் ஈட்ட முடியும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் தொழில்துறையை அதன் இலக்குகளை நோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
சுற்றுலாத் துறையின் மூலம் கிடைக்கப் பெறும் வருமானங்களைக் கொண்டு, நாட்டை பொருளாதாரத்தில் மீட்டு கொண்டு வர முடியும்.
2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையில் வெளிநாட்டு நாணயம் இல்லாமல் போனது.
இதன் காரணமாக அடிப்படைத் தேவைகளான மருத்து, சில உணவுகள் போன்றவற்றுக்குகூட பணம் செலுத்த முடியாமல் போனது.
தொற்றுநோய், பின்னர் டொலர்கள் தேங்கிக் கிடப்பது பற்றிய தவறான தகவல்கள், எரிசக்தி மற்றும் பிற உலகளாவிய பொருட்களின் விலையின் காரணமாக அவற்றுக்கு அதிக டொலர்கள் செலுத்த வேண்டியிருந்தது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, இலங்கைக்கு வர விரும்புவோருக்கான பழைய விசா முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த வருடம் ஏப்ரல் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய முறையானது, விசா பெறுபவர்களுக்கு அதிக சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதற்கு முன்பிருந்த தொகையை விடவும் செலவுகள் இரு மடங்காகியுள்ளது.
இது எரிபொருள், மருந்து, உணவை இறக்குமதி செய்வதற்கு முக்கிய வருமானத்தைப் பெற்றுத் தரும் சுற்றுலாத் துறையைப் பற்றிய கவலையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.