நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை விட பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிடும் பஸ்கள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிக கட்டணம் அறவிடும் பஸ்கள் தொடர்பில் முறையிட 1955 அல்லது 071 25 95 555 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் அறவிடும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
குறைக்கப்பட்ட டீசல் கட்டணத்துக்கு ஏற்ப பஸ் பயணக் கட்டணம் குறைக்கப்படவில்லை எனவும் பெரும்பாலான பஸ்களில் ஆரம்ப பயணக் கட்டணத்துக்கு ஏற்ப சரியான வகையில் மிகுதி பணம் வழங்கப்படுவதில்லை எனவும் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நேற்று(01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் 4.24 சதவீதமாக பஸ் கட்டணம் குறைக்கப்பட்டிருந்த நிலையில் ஆரம்ப கட்டணம் 27 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.