அரச வாகனத்தை நான் பயன்படுத்தவில்லை! -பத்ம உதயசாந்த குணசேகர

ஆட்சி மாற்றத்தின் பின்னர் அண்மையில் அரச வாகனங்களை திருப்பி அனுப்பியவர்களின் பட்டியலில் தனது பெயரும் உள்ளடங்கியமை தவறான தகவல் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார்.

புதிய நிர்வாகத்தினால் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட பட்டியலின்படி, பத்ம உதயசாந்த குணசேகர டொயோட்டா ஹிலக்ஸ் வாகனத்தை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் டொயோட்டா ஹிலக்ஸ் வாகனத்தை பயன்படுத்தியதாகவும், தான் நாடாளுமன்ற உறுப்பினர் எனவும் வெளியான தகவல் பொய்யானது என சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

நான் 2004 இல் மொனராகலை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு நுழைந்து 2015 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
2020 வரை நாடாளுமன்ற உறுப்பினராக சேவை செய்தேன். இதன் பின்னர் நான் ஒரு சுயாதீன நபராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவராகவும் இருந்தேன்.

தனிப்பட்ட காரணங்களுக்காக நான் அரசியலில் இருந்து விலகி, இலங்கை அரசியல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அவ்வாறே தனது பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர, அரச வாகனத்தை தாம் பயன்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் கூறப்பட்டுள்ளபடி அரச வாகனத்தை அவர் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

Recommended For You

About the Author: admin