அதிகார மாற்றத்திற்கு பின்னர் முகநூலை இலக்கு வைத்து பரப்பப்படட பொய்கள்

அதிகார மாற்றத்திற்கு பின்னர் முகநூலை இலக்கு வைத்து பரப்பப்படட பொய்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட சகல மதுபான உரிமை பத்திரங்களும் இரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படும் தகவல்கள் தவறானது
இன்றுவரை எந்த மதுபான உரிமை பத்திரங்களும் இரத்து செய்யப்படவில்லை

குறைந்தது 30 அரசியல் பிரமுகர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் பட்டியல் சர்வதேச விமான நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்கிற தகவல்கள் தவறானது

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான மீள் விசாரணை ஆரம்பிக்கப்பட்ட தகவல்கள் தவறானது இன்று வரை அரச புலனாய்வு கட்டமைப்புகளில் கூட மாற்றம் செய்யப்படவில்லை

ஊழல் மோசடிகள் தொடர்பான பைல்கள் தூசு தட்டப்படுகின்றது மற்றும் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் திருமதி சார்ள்ஸ் உட்பட பலர் கைது செய்யப்படுவார்கள் என்கிற தகவல் போலியானது

திருமதி சார்ள்ஸ் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதுவிமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டார் என்கிற தகவல் உண்மைக்கு புறம்பானது

சபாநாயர் மற்றும் எதிர்கட்சி தலைவர் தவிர்ந்த பாராளமன்ற உறுப்பினர்களுக்கும் சகல பாதுகாப்பு விலக்க உத்தரவு என்கிற தகவல்கள் தவறானது.

திரு மஹிந்த ராஜபக்சே அவர்களுக்கான STF பாதுகாப்பு மீள அழைக்கப்பட்ட தகவல்களில் உண்மையில்லை
வெளிநாட்டு சேவையுள்ள அரசியல்வாதிகளின் உறவினர்கள் நாட்டுக்கு மீள அழைக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பை தகவல் திணைக்களம் கூட உறுதிப்படுத்த வில்லை

ஜனாதிபதி செயலகத்தில் முன்னாள் பணியாளர்கள் ஒப்படைத்த வாகனங்கள் ஏலமிடப்பட்டு வருவாய் அரச நிதியில் சேர்க்க உத்தரவு என்கிற தகவல் போலியானது

ஆட்சி மாற்றத்திற்கு பின் சகல உயர் அரச நியமனங்களும் பொறிமுறைகள் ஊடக தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பரவும் தகவல்களில் உண்மையில்லை

Political gimmicks and stunts என்பன அரசியலின் பகுதி என்றாலும் அதை உண்மையென நம்பி உணர்ச்சி வசப்படுபவர்கள் குறைந்தது உண்மைகளை தெரிந்து கொண்டால் ஏமாற்றங்களை தவிர்க்கலாம்.
இனம் ஒன்றின் குரல்

Recommended For You

About the Author: admin