முன்னாள் எம்பிக்களிடம் ஆயுதக் களைவு: உத்தரவு பிறப்பிக்கப்பட்டது!

தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை தாமதமின்றி பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தத் துப்பாக்கிகளை பெற்றுக் கொண்ட முன்னாள் உறுப்பினர்களை ஒப்படைக்குமாறு பாராளுமன்ற அதிகாரிகள் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் உள்ள 225 எம்.பி.க்களில் 100க்கும் மேற்பட்டோர் தனிப்பட்ட பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் எம்.பி.க்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்புக்காக குறைந்தது இரண்டு துப்பாக்கிகளையாவது வைத்திருக்க அனுமதிப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, நாட்டில் நிலவும் வன்முறைகள் காரணமாக, முன்னாள் எம்.பி.க்கள் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்கும் புதிய கொள்கையை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்ததாகக் குறிப்பிட்டார்

Recommended For You

About the Author: admin