இறுதி தேர்தல் பரப்புரை இன்று: வேட்பாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களில் 25 வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஒன்பது வேட்பாளர்கள் பாதுகாப்பு கோரவில்லை எனவும், நான்கு வேட்பாளர்கள் பாதுகாப்பு வேண்டுமா, வேண்டாமா என்று அறிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட 24 மணித்தியால விசேட நடவடிக்கை அலுவலகங்களில் அறிக்கைகள் பெற்று வேட்பாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.

பொலிஸ் தவிர்ந்த முப்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படை அல்லது சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வேட்பாளர்கள் இன்று (18) கலந்து கொள்ளும் கடைசி கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன், அந்த இடங்களுக்கு உளவுத்துறை தகவல் பெற்றுக்கொள்ளப்படும்.

கூட்டத்திற்கு சில மணி நேரம் முன்னதாக, தேவையான பாதுகாப்பை அளித்து கூட்டம் முடிந்த பின்னரும் உளவுத்துறை தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர்களின் கூட்டங்களுக்கு செயல்பாட்டு அலுவலகங்கள் பாதுகாப்பு வழங்குவதற்கு முன்பு, தேவையான பாதுகாப்பை வழங்குவதற்காக பொலிஸாரின் அறிக்கையும் பெற்றுக்கொள்ளப்படும்.

மேலும், தேர்தல் தினத்தன்று பாதுகாப்பு பணியில் பொலிஸ் நடமாடும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்கு தேவையான பாதுகாப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin