புலமைப்பரிசல் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு!

நேற்று நிறைவடைந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு 323,841 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததுடன், நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது.

அதன்படி நேற்றுடன் நிறைவடைந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், வினாத்தாள்கள் குறித்து மீண்டும் கேட்டு பிள்ளைகளை ஒடுக்க வேண்டாம் என பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கிறேன்.

இதேவேளை, நேற்றைய பரீட்சையின் போது பிள்ளைகளுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதுபற்றி எழுத்து மூலம் பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும், இதுவரையில் அவ்வாறான முறைகேடு தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin