குழந்தைகள் மற்றும் இளம்பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

செயற்கை உணவுகளை உண்பதால் சிறு குழந்தைகளில் அரிப்புத் தோலழற்சி (atopic eczema) ஏற்படும் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தோல் நோய் வைத்திய நிபுணர் ஸ்ரீஆனி சமரவீர தெரிவித்துள்ளார்.

உலக அடோபிக் எக்ஸிமா தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுமார் முப்பது சதவீத குழந்தைகள் gouty eczema அல்லது atopic eczema நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வயது வந்தவர்களில் பத்து சதவீதம் பேருக்கு தோலழற்சி உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் மரபணு ரீதியாக பரவக்கூடியது மற்றும் குழந்தைகளில் ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளார்.

மேலும், இந்த நோய் வளரும் நாடுகளிலும் அடையாளம் காணப்படுவதாகவும், இளம்பெண்களுக்கு இந்த நோய் வருவதற்கான அபாயம் இருப்பதாகவும் வைத்திய நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே அதிகளவு சவர்க்காரங்களை பயன்படுத்தாமல் மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதும் பருத்தி ஆடைகளை அணிவதும் பொருத்தமானது என வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin