முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விடுதலை தொடர்பான தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி அறிவிக்கப்படும் என மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை நீக்குமாறு உயர்நீதிமன்றத்தில் கெஹலிய ரம்புக்வெல்ல தரப்பில் இருந்து மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் இதற்கான உத்தரவினை மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று மீண்டும் ஒத்திவைத்தள்ளது.
இதேவேளை இதற்கான உத்தரவு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கெஹலிய ரம்புக்வெல்ல முன்வைத்த மனு விசாரணைக்கு அனுமதிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் குழாம் மேலும் குறிப்பிட்டுள்ளது.