பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பதக்க பட்டியலில் அதிகமான தங்களை வென்று ஐக்கிய அமெரிக்கா முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
இதனடிப்படையில், 30 தங்கம், 38 வெள்ளி, 35 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 103 பதக்கங்களுடன் ஐக்கிய அமெரிக்கா முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
தொடர்ந்து 29தங்கம், 25 வெள்ளி, 19 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 73 பதக்கங்களை வென்று சீனா இரண்டாம் இடத்திலும் 18தங்கம், 14 வெள்ளி, 13 வெண்கலம் இடங்கலாக மொத்தம் 45 பதக்கங்களை வென்றுஅவுஸ்திரேலியா மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றன.
பட்டியல் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ், பிரித்தானியா, கொரியா, ஜப்பான் ஆகியன காணப்படுகின்றன.
அழகாக இருப்பதால் போட்டிகளில் இருந்து ஓய்வு
வெறும் 20 வயதே ஆன பராகுவே நாட்டு நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சா ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளமையானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இதனடிப்படையில், “அழகாக இருக்கிறார். பிறரின் கவனத்தை சிதறடிக்கிறாய்“ என லுவானா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இதனால் மனவுளைச்சலுக்கு ஆளான லுவானா தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
லுவானா, 100 மீட்டர் பெண்கள் பட்டாம்பூச்சி நீச்சல் போட்டியில் (women’s butterfly event)பங்கேற்றார். ஜார்ஜியாவின் அன்னா நாட்ஸை விட 0.24 வினாடிகள் பின்தங்கிய நிலையில் அவர் தனது ஹீட் போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்தார், அரையிறுதிக்குத் தகுதிபெறும் வாய்ப்பையும் தவறவிட்டார்.
அவரது பந்தயத்திற்குப் பிறகு, அலோன்சோ, கிளாரோ ஸ்போர்ட்ஸுடன் ஒரு உணர்ச்சிபூர்வமான நேர்காணலை வழங்கினார். ஒலிம்பிக்கில் தனது தொழில்முறை நீச்சல் வாழ்க்கையை முடித்துக்கொள்வது குறித்து அவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
“நான் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன், ஏனென்றால் இது எனது கடைசி பந்தயம். நான் நீச்சலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். நான் நீண்ட, 18 ஆண்டுகளாக நீந்துகிறேன், எனக்கு பல உணர்வுகள் உள்ளன, ”என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
அவர் கண்ணீருடன் தோன்றிய நேர்காணல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியதுடன் பலரின் இதயங்களைத் தொட்டது என்றே கூறவேண்டும்.
ஓய்வு பெறுவதற்கான முடிவு
லுவானா அலோன்சோ தனது ஓய்வுக்கான முடிவு ஒலிம்பிக்கிற்கு நீண்ட காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தினார்.
விளையாட்டுகளில் அவரது செயல்திறன் காரணமாக அல்ல, நான் கொஞ்சம் கவர்ச்சியாக இருப்பதால் அது மற்றவர்களுக்கு பாதிப்பாக இருக்க கூடாது. நன்கு சிந்தித்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளேன். மக்களே, எனது முடிவு நீண்ட காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்டது. அதனால் ஒன்றுமில்லை, எப்போதும் என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும்,” என்று அவர் கூறி விடைபெற்றார்.