நாடாளுமன்றத்தில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் 134 வாக்குகளால் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு 92 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”தனிப்பெரும்பான்மையைக் கூட அரசாங்கம் இழந்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் இன்னும் 46 நாட்களில் முடிவடையும். எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் கொள்கை அடித்தளத்துடன் அண்மையில் உருவாகியுள்ள மாபெரும் கூட்டணி இம்மாதம் 08ஆம் திகதி உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். தற்போதைய எதிர்க்கட்சி தலைவர்.
நீதித்துறை மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
தற்போதைய ஜனாதிபதி நீதித்துறையை செயலிழக்கச் செய்வதாக நீதிபதிகள் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர்” என்றார்