அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், பூமியின் துணைக்கோளான நிலவு பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விஸ்கான்சின் – மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள குழுவொன்று நடத்திய இந்த ஆய்வில், நிலவானது, ஆண்டுக்கு சுமார் 3.8 சென்ரிமீற்றர் வீதம் பூமியிலிருந்து விலகிச் செல்வதாகவும் இதனால் பகலின் நேரம் அதிகமாகவும் எனவும் தெரிய வந்துள்ளது.
ஒரு நாளில் 24 மணித்தியாலம் இருக்கும் நிலையில், நிலவு விலகிச் செல்லும் மத்தியில் அது 25 மணிநேரமாக மாறும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இது உடனே மாறிவிடாது. இது நிகழ்வதற்கு சுமார் 20 கோடி வருடங்கள் ஆகும்.