மனிதர்களோ அல்லது ஏனைய உயிரினங்களோ பெண் இனம் குட்டியீன,ஆண் இனம் அதனை பாதுகாக்கும் என்ற கோட்பாடுதான் நிலவி வருகிறது.
ஆனால், ஆண் இனம் வயிற்றில் குட்டிகளை சுமக்கும் உயிரினம் பற்றி தெரியுமா?
Syngnathidae எனும் குடும்பத்தைச் சேர்ந்த மீன்களின் குழுவில், ஆண் மீன்கள் தான் வயிற்றில் குட்டிகளை சுமக்கும்.
இவை கடற் குதிரைகள், குழாய் மீன்கள் அல்லது கடல் டிராகன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பெண் விலங்கு முட்டைகளை ஆண் விலங்கின் வயிற்றுக்கு மாற்றும். கடல் குதிரையின் வயிற்றில் காணப்படும் சிறப்பு பைகளில் அவை முட்டையிடும்.
இந்த முட்டைகள் ஆணின் உடலில் கருவுறுகின்றன.
இந்த முட்டைகள் குஞ்சு பொரித்து பிறப்பதற்கு நான்கு வாரங்கள் வரை ஆகும்.
இதன் பிரசவ முறை எப்படியென்றால், இவற்றின் பிரசவ வலி 12 மணித்தியாலம் வரை நீடிக்கும். ஒரு கடற்குதிரை ஒரே சமயத்தில் 1000 குட்டிகளை பெற்றெடுக்கும். அக் குட்டிகள் மூன்று வாரங்கள் வரையில் கடலில் மிதக்கும்.
ஆனால், 1000 முட்டைகளில் ஒரு கடல் குதிரை குஞ்சு மட்டுமே முதிர்ச்சியடையும்.