ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த அக்கட்சி நேற்று திங்கட்கிழமை தீர்மானித்தது.
இந்தத் தீர்மானத்துக்கு அக்கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். என்றாலும், உறுதியாக வர்த்தகர் தம்மிக்க பெரேராவை வேட்பாளராக பொதுஜன பெரமுன களமிறக்கும் என அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள மூன்று முக்கிய அமைச்சர்களான கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன ஆகியோரின் மாவட்டத் தலைவர் பதவிகள் பறிக்கப்பட உள்ளன.
அதன் பிரகாரம் கம்பஹா, மாத்தறை, காலி ஆகிய மாவட்டங்களுக்கு புதிய மாவட்டத் தலைவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்
அதேபோன்று கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செல்லும் ஏனைய மாவட்டத் தலைவர்களின் பதவிகளும் அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவால் பறிக்கப்படும் என ரஷ்யாவுக்கான முன்னான் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.