குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இலங்கை உணவு விநியோக ஊழியர் சம்பவம் தொடர்பில் தனக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி நாடு திரும்பியுள்ளார்.
இந்த சம்பவம் ஜனவரி 11ஆம் திகதி இடம்பெற்ற போதிலும் இதுவரை தனக்கு நீதி கிடைக்கவில்லை எனவும், எனவே தனது பணியாளரிடம் கடன் பெற்று நாடு திரும்ப தீர்மானித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறினார்.
இந்த விடய் தொடர்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 46 வயதான லக்ஷ்மன் திலகரத்ன பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கூறுகையில்,
தான் பணியாற்றிய உணவகத்தில் அதிகாலை 4.45 மணியளவில் ஒருவருக்கு உணவு விநியோக செய்யப்பட இருந்ததாகவும், எனினும், ஓடர் செய்யப்பட்ட உணவு தாமதமாகவே தனக்கு கிடைததாக அவர் குறிப்பிட்டார்.
சாப்பாடு விநியோகம் செய்வதற்காக வீட்டுக்குச் சென்றிருந்தேன். உணவை ஓடர் செய்தவர் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை.
சில நிமிடங்களுக்குப் பிறகு, ஓர்டர் செய்த நபர் ஒரு வாகனத்தில் வந்து தனது வாகனத்திற்கு அருகில் நின்றார். இதனையடுது், வெளியே போ என கூறி துப்பாக்கியால் சுட்டார்.
இந்தச் சம்பவத்திற்கு பிறகு சக ஊழியரைகள் என்னை வைத்தியசாலையில் அனுமதித்தனர். சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
அவரது வழக்கு ஜூன் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, வழக்கு காலை 9.30 மணிக்கு எடுக்கப்பட இருந்தபோதிலும், தூதரக அதிகாரிகள் 11.30 மணிக்கு அழைத்துச் சென்றனர்.
அதற்குள் வழக்கு முடிந்துவிட்டதால், வழக்கு எப்போது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சட்டத்தரணியால் கூற முடியவில்லை.
‘எனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், தூதரகத்தில் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று எண்ணி, நாடு திரும்ப முடிவு செய்தேன்.
நான் பணிபுரிந்த உணவகத்தில் இருந்து 100 தினார் கடன் வாங்கி நாடு திரும்ப முடிவு செய்தேன்,’ என்று அவர் மேலும் கூறினார்.
ராஜாங்கனையில் உள்ள தனது கிராமத்திற்குத் திரும்புவதற்கு முன், ‘என் குடும்பத்தைப் பராமரிக்க நான் இப்போது பிச்சை எடுக்க வேண்டியிருக்கும்’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.