பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சிலர் வாகனமொன்றை சோதனை செய்யும் சந்தர்ப்பத்தில் வாகனத்தினுள் கஞ்சாவை வைத்து இளைஞர் குழுவொன்றிடம் சர்சசையில் ஈடுபட முயற்சித்த சம்பவம் தொடர்பிலான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகிய நிலையில், சோதனை செய்த குறித்த பொலிஸ் அதிகாரிகள் சிலருள் கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கஞ்சா பொதியை பொலிஸாருக்கு கையளிக்காத குற்றச்சாட்டின் பேரில் இந்த கான்ஸ்டபிள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது கடமையைத் தவறியுள்ளதாகவும் வாகனத்தில் கஞ்சா இருப்பதாக அதில் பயணித்த இளைஞர்கள் மீது குற்றம் சுமத்துவதாயின் அந்த கஞ்சாவை பொலிஸாரிடம் கையளித்திருக்க முடியும் என்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் திவயின செய்திக்கு தெரிவித்தள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இந்த கஞ்சா பொலிஸார் மூலம் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் உண்மைத்தன்மை எதுவாக இருப்பினும் வாகனத்தில் இருந்ததாக கூறப்படும் கஞ்சாவை பொலிஸில் கையளிக்கத் தவறியமை தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.