ராஜபக்ச குடும்பம்: முற்றாக உடைக்கப்பட்ட எதிர்ப்பார்ப்புகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாரிசு உரிமையாளர்களான ராஜபக்ச குடும்பத்தின் பலம் வாய்ந்த ஐந்து பேர் தற்போது கட்சியில் பலமற்றவர்களாகிவிட்ட நிலையில், அதன் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைகளில் குவிக்கப்பட்டுள்ளது.

மொட்டுக் கட்சி எனப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, தற்போதைய தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச , பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சமல் ராஜபக்ச என ராஜபக்ச குடும்பத்தின் சில முக்கியஸ்தர்கள் பதவிகளை வகித்த போதிலும் அவர்களின் அதிகாரங்கள் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, ரணில் ஆதரவு நிலைப்பாட்டிற்கு ஷசேந்திர ராஜபக்ச மாறினாலும், ராஜபக்ச குடும்பத்துடன் விரிசலை ஏற்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அவரும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பல தடவைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்த கருத்துக்கள் மூலம் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரத்தில் இருந்து விலகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததும் காணப்பட்ட ராஜபக்ச குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் முற்றாக உடைக்கப்பட்டு, கட்சியின் பெரும்பான்மையானவர்களை ரணில் விக்கிரமசிங்க தன் பக்கம் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Recommended For You

About the Author: admin