முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்ட இளைஞன் பற்றிய மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவைச் சேர்ந்த தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயதுடைய இளைஞனே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
குறித்த நபர் உளவுத்துறை அதிகாரியொருவரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
க்ரூக்ஸ் மிகவும் தனிமையான அமைதியான சமூகத் தொடர்பு இல்லாதவர் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு சரியாக குறிவைக்கும் திறன் இன்மையால் மேத்யூ நிராகரிக்கப்பட்டுள்ளார்.
அவரது தோற்றத்தை சக மாணவர்கள் தொடர்ந்து கேலி செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது தந்தையின் ரைபிளை பயன்படுத்தியே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவனது காரில் சில வெடிகுண்டுகளையும் பாதுகாப்பு படையினர் கண்டெடுத்துள்ளனர். ஆனாலும் குறித்த இளைஞன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதற்கு எந்தவொரு வலுவான காரணமும் இல்லை.
அவர் தன்னிச்சையாகவே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே இந்த இளைஞன் கொண்டிருந்தான் என்றும் கூறப்படுகின்றது.