வேட்பாளரை அறிவிப்பதில் ஏன் தாமதம்?

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரின் பெயர் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் கட்டமைப்பும் வியூகமும் ஜனாதிபதி வேட்பாளரை 4 முதல் 6 வாரங்களுக்குள் வெற்றிபெறச் செய்யும் அளவுக்கு பலமாக இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை நியமிப்பதற்கு ஏன் தாமதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச,

பீதியடைந்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க மாட்டோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு இணங்குகின்ற வேட்பாளரை இம்மாத இறுதியில் அறிவிக்க உள்ளோம். வேட்பாளரை நியமிப்பதில் நாம் அவசரப்படவில்லை.

பொதுஜன பெரமுனவின் கட்சிக் கட்டமைப்பு மிகவும் பலமாக உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட 4 முதல் 6 வாரங்களுக்குள் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய முடியும். எமது வேட்பாளர் ஏற்கனவே அடிமட்ட ஒழுங்கமைப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.” என்றார்.

Recommended For You

About the Author: admin