இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி நிகழ்வில் பன்நாட்டு இராஜதந்திரிகளும் பங்கேற்கவுள்ளனர். அதேவேளை, தமிழகத்தில் இருந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இறுதி நிகழ்வில் பங்கேற்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் இடம்பெற உள்ள இறுதி நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை காலை திருகோணமலையில் உள்ள அவரது இல்லதுக்கு விசேட விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஏனைய கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.