எக்ஸ் (X) இற்கு மாறாக அறிமுகப்படுத்தப்பட்ட Koo எனும் சமூக ஊடக தளத்தினை முழுமையாக நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த சமூக ஊடகத்தை பயன்படுத்திவந்த இலட்சக்கணக்கான இந்தியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போதியளவு நிதி இன்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கு அதிக பணம் செலவழிக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட காரணங்கள் நிமித்தம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Koo எனும் சமூக ஊடகத்தில் 10 மொழிகளில் தகவல்களை பதிவேற்ற முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்திற்கும் எக்ஸ் வலையமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, பல அரசாங்க அமைச்சர்கள் Koo வலையமைப்பை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினர்.
இதன் காரணமாக Koo செயலி மேலும் பிரபலமடைந்தது. இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில், Koo செயலி சுமார் 20 மில்லியன் மக்களினால் பதிவிறக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.