பிரித்தானியாவில் நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் அனைவரதும் எதிர்ப்பார்ப்பாகவே காணப்படுகின்றது.
மாற்றம் என்ற ஒற்றை வார்த்தையை பிரச்சாரத்தில் மையப்படுத்தி பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தொழிற்கட்சி முன்னிலை வகிக்கின்றது.
14 ஆண்டுகால ஆட்சியில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்காக பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி தண்டிக்கப்படும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் உலகப் போரின் முடிவிலிருந்து, புதிய அரசாங்கம் மிகப்பெரிய சவால்களில் சிலவற்றை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.
பொராளாதார வளர்ச்சிக்குப் போராட வேண்டியுள்ளது. சுகாதாரம் மற்றும் பிற சேவைகளும் சிரமத்தில் உள்ளன. அவற்றிற்கு பயன்படுத்துவதற்கு பொது நிதியில் போதியளவாக இல்லையென கூறப்படுகின்றது.
குடியேற்றம் மற்றும் வீடு கட்டும் இலக்குகளில் அரசாங்கம் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் பெரும் தோல்வியை எதிர்நோக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2008 ஆண்டு முதல் 2009 ஆண்டு உலக நிதி நெருக்கடிக்குப் பின்னர் ஏனைய சில நாடுகளைப் போலவே பிரித்தானியாவும் மந்தமான பொருளாதார வளர்ச்சியை மாத்திரமே நிர்வகித்து வந்தது.
2010 ஆம் ஆண்டில் கன்சர்வேடிவ்கள் ஆட்சியமைத்த போது பிரித்தானியாவின் வளர்ச்சி ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலியை விட ஓரளவு முன்னணி வகித்தது.
அதிக குடியேற்றம் காரணமாக 2010 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவின் வளர்ச்சி, அமெரிக்காவை விட பின்தங்கியுள்ளது.
கொவிட் தொற்றுநோய்க்குப் பின்னர், பிரித்தானியாவின் பொருளாதாரம் G7 இல் இரண்டாவது பலவீனமான நாடாக உள்ளது.