கத்தியுடன் கூட்டத்திற்கு சென்றவரால் பரபரப்பு!

பலாங்கொடை நகரசபை உறுப்பினர் ஒருவர் இன்று இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தில் கூரிய கத்தியை காட்டியதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய உறுப்பினரும், முன்னாள் தலைவருமான குறித்த நபர் சற்றுநேரம் சபையில் காத்திருந்து விட்டு வெளியேறும் போது தான் உடுத்தியிருந்த சாரத்தில் மறைத்து காலில் கட்டி வைத்திருந்த கூரிய கத்தியை காட்டியுள்ளார்.

உறுப்பினர்கள் கண்டனம்

இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பலாங்கொடை நகரசபை உறுப்பினர் (ஐக்கிய தேசியக் கட்சி) திருமதி சுனேத்ரா டி.வீரசிங்க, இவ்வாறான உறுப்பினர்கள் ஆயுதங்களை ஏந்தியவாறு சபைக்குள் வருவது சபையில் உள்ள அனைவரின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் என கூறினார் .

பலாங்கொடை நகரசபை உறுப்பினர் செல்வி எம்.சந்திரலதா (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) ஆயுதங்களைக் கொண்டு வரும் உறுப்பினர்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என சபையில் தெரிவித்தார் .

பலாங்கொடை நகரசபையின் முன்னாள் தலைவரின் நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாக அவைத் தலைவர் வசந்தகுமார குணரத்ன தெரிவித்ததுடன் ஒவ்வொரு உறுப்பினரதும் பாதுகாப்பை உறுதி படுத்துவது தனது பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

Recommended For You

About the Author: webeditor