இலங்கையர்கள் தொடர்புப்பட்டுள்ள நேரலை பாலியல் உள்ளடக்கம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான காணொளிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலாபகரமான தன்மை காரணமாக இந்த இந்த சட்டவிரோத நடவடிக்கைகளின் போக்கில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளதாக பொலிஸாரின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளம் தம்பதிகள் தொடர்பாக கணிசமான அளவில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்கள் நேரலை பாலியல் காணொளிகளில் ஈடுபடுவதாகவும், அவை பதிவு செய்யப்பட்டு கணிசமான லாபத்திற்காக வெளிநாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன.
இந்த காணொளிகள் சில முக்கிய ஆபாச வலைத்தளங்களில் தங்களில் வெளியாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந்த ஆபத்தான போக்கைத் தடுக்க அதிகாரிகள் தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவங்கள் தொடர்பாக ஏற்கனவே பலரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்ற ஒரு சம்பவத்தில், சீன நிறுவனத்திற்கு நேரடி பாலிய காணொளிகளை விற்பனை செய்யும் பாரிய அளவிலான மோசடியை பிலியந்தலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பிலியந்தலை, படகெத்தர பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதிகள் இருவரையும் பிலியந்தலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை, ஸ்பா சேவை என்ற போர்வையில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் மூலம் இந்த பெண்கள் கணிசமான வருமானத்தை ஈட்டி வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சட்டவிரோத வர்த்தகத்தை தடுக்கும் நோக்கில் ஸ்பாக்களாக இயங்கும் பாலியல் தொழில் விடுதிகளில் சோதனை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த சட்டவிரோத சேவைகளை ஊக்குவிக்கும் ஏராளமான இணையதளங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், இதுபோன்ற மோசடிகளில் சிக்க வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். அத்துடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.