மனிதாபிமான அமைப்புகளின் கீழ் இயங்கும் “உளவு வலையமைப்பை” கைது செய்ததாக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் 11 பணியாளர்கள் உட்பட உதவிப் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
“ஒரு அமெரிக்க-இஸ்ரேலிய உளவு வலையமைப்பு கைது செய்யப்பட்டது,”என ஈரான் ஆதரவு குழுவின் பாதுகாப்பு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியாவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆறு உறுப்பினர்கள் உட்பட, ஏமனின் கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும் பல பகுதிகளில் ஹூதிகளால் கடத்தப்பட்ட உதவிப் பணியாளர்கள் 11 பேர் அடங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
பாரிய கடத்தல் பிரச்சாரத்தின்” ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகளின் முகவர்கள் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் பணியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் தெரிவித்துள்ளது.