T20 உலகக் கிண்ண தொடரின் ஓமனுக்கு எதிரான போட்டியில் நமீபியா வீரர் ரூபன் ட்ரம்பெல்மேன் புதிய சாதனை படைத்துள்ளார்.
இதன்படி, முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த B குரூப் போட்டியில் ஓமன் அணி 109 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் ஆடுகளத்தில் நமீபியா அணியின் தலைவர் ஹெர்ஹார்ட் எராஸ்மஸ் நாணய நுழற்சியில் வெற்றிபெற்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பந்துவீசிய போது நமீபியா வீரர் ரூபன் ட்ரம்பெல்மேன் நான்கு ஓவர்களில் 21 ஓட்டங்களை விக்டுக்கொடுத்து நான்னு விக்கெட்டகளை வீழ்த்தியிருந்தார்.
ஓமன் அணியின் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் விழ இறுதியில் அந்த அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்களை மட்டுமே குவித்ததுஇ
டி20 உலகக் கோப்பை போட்டியில் ட்ரம்பெல்மேனின் 21 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் நமீபியாவுக்கு சிறந்தவை, ஓமன் 19.4 ஓவர்களில் 109 ரன்களுக்குச் சுருண்டது.
அவர்களின் அனுபவமிக்க சகலதுறை வீரரான ஜீஷன் மக்சூத் மட்டுமே100 ஸ்டிரைக் ரேட்டில் 22 ஓட்டங்களை குவித்திருந்தார்.
காலித் கெய்ல் மற்றும் அயன் கான் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்த முயற்சித்தனர். ஆனால் ஓமானால் நமீபிய பந்துவீச்சு தாக்குதலை கையாள முடியவில்லை.
மூத்த வீரர் டேவிட் வைஸ் மூன்று விக்கெட்டுகளையும், ஹெர்ஹார்ட் எராஸ்மஸ் நான்கு ஓவர்களில் 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.