கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 2023 (2024) பெறுபேறுகள்: விசேட சித்திகள் அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.

மேற்படி பெறுபேறுகளை கீழ்காணும் இணைப்பில் பார்வையிடலாம் 👇

https://www.doenets.lk/examresult

உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றது.

உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 229,057 பாடசாலை பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதோடு 40,556 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

அவர்களுள், மொத்தம் 173,444 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுள், விசேட சித்தியைப் பெற்ற மாணவர்கள் தொடர்பில் இன்றிரவு அறிவிக்கப்படவுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்கள் குறித்து இன்றிரவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin