நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் தொடர்பில் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா பதவியேற்றதிலிருந்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
சமீப காலமாகவே அவர் சிக்கலான காலத்தை எதிர்கொண்டு வருகிறார்.
மும்பை ரசிகர்களின் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அவர் தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றார், ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
எவ்வாறாயினும், இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளிலிருந்து விலகிய முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் ஆனது.
Hardik Pandya and Nataša Stanković
தற்போது ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் (Nataša Stanković) அவரை விட்டு பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வழமையாக இருவரும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடாஷா ஸ்டான்கோவிக், தற்போது ஹர்திக் உடன் இருக்கும் எந்தவொரு புகைப்படத்தையும் வெளியிடுவதில்லை எனவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழமையாக ஹர்திக் பாண்டியா விளையாடும் போட்டிகளை பார்வையிட வரும் நடாஷா , நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் கலந்துக் கொள்ளவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
இதேவேளை, நடாஷாவின் சமூக வலைத்தள கணக்குகளில் இருந்து பாண்டியாவின் பெயரை நீக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Nataša Stanković instagram account


கடந்த 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதியன்று செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் (Nataša Stanković) என்பவரை ஹர்திக் பாண்டியா திருமணம் செய்துக்கொண்டார்.
அதே வருடத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.
அவர்களுடைய காதல் வாழ்கை பலரை கவர்ந்தது.
எவ்வாறாயினும், அவர்களது இந்த பிரிவு தொடர்பில் இருவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

