நாட்டின் நிலக்கரி (graphite) சுரங்கத்தை கையகப்படுத்துவது தொடர்பில் இலங்கையுடன் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
நிலக்கரியின் தேவை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படாத போதிலும், பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கையில் காணப்படும் நிலக்கரி உலகளவில் மிகவும் தரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த வருடம் இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட 30 முக்கிய கனிம பொருட்களின் பட்டியலில் நிலக்கரியும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையிலே, இந்தியாவின் சில நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள கனிம பொருட்கள் தொடர்பில் தேடுதல்களை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.