இலங்கை அரசின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம்

ஜெனிவாவில் இலங்கையர்கள் சிலர் , இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக் காரர்களை விடுவிக்குமாறு கோரி ஜெனிவாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு

அதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே ஜெனிவா சென்று அங்கு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor