கனடாவில் உள்ள பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் மாகாண குடியேற்ற விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள திடீர் மாற்றத்தால் நாடு கடத்தப்பட உள்ளனர்.
இந்நிலையில், குடியேற்றக் கொள்கையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை மறுபரிசீலனை செய்யாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கனேடிய மாகாணமான பிரின்ஸ் எட்வர்ட் தீவு, சுகாதார மற்றும் வீட்டு உள்கட்டமைப்பில் உள்ள சிரமத்தின் காரணமாக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், அதன் மாகாண நியமனத் திட்டத்தில் (PNP) குடியேற்ற விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது.
கனேடிய மாகாண அரசாங்கம் திடீரென குடியேற்ற விதிகளை மாற்றியதாகவும், தங்களுக்கு பணி அனுமதி வழங்க மறுப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன்படி, குறித்த மாணவர்கள், பட்டம் பெற்றிருந்தாலும், இப்போது நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பணி அனுமதி நீட்டிப்பு மற்றும் குடியேற்ற கொள்கைகளில் சமீபத்திய மாற்றங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
மே ஒன்பதாம் திகதி 25 பேருடன் ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் தற்போது 300க்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.