திருகோணமலை – சம்பூர், சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பெணகள் உட்பட நால்வர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரின் பிணை விண்ணப்பத்தினை மோஷன் மூலம் சமர்ப்பித்ததுடன், பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை என சட்டமா அதிபர் தெரிவித்ததை அடுத்து மூதூர் நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சம்பூரில் இடம்பெற்ற கைதுகள் தொடர்பில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இளம் ஊடகவியலாளர் சங்கத்தினால் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் உட்பட நால்வருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை எனக்கூறப்படும் பேரிழப்பை நினைவு கூர்ந்து கஞ்சி வழங்கியதையடுத்து, சம்பூர் பொலிஸார் இரவோரு இரவாக வீடுகளுக்குச் சென்று வலுக்கட்டாயமாக இவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர்.