இஸ்ரேலிய பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிடுகிறார் சஜித்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் அட்டூழியங்களுக்கு ஒப்பானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (14.05.2024) உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

“யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் செய்த அட்டூழியங்களை நினைவுபடுத்தும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பாலஸ்தீன மக்கள் தற்போது கடுமையான பயங்கரவாதத்தை சகித்து வருகின்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அவர்களுடன் ஒற்றுமையுடன் நின்று, இந்த தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர நிபந்தனையற்ற ஆதரவை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் பாலஸ்தீன நிலங்களைக் கைப்பற்றி புதிய குடியேற்றங்களை நிறுவி காசா மக்களை அழிக்க முயற்சிக்கின்றது.

இந்த வகையான பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். உலகளாவிய எதிர்ப்பையும் மீறி பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச ஊடகங்களின்படி, ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 35,173 பேர் கொல்லப்பட்டுள்ளதுன், 79,061 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin