சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்விலும் பங்கேற்பு

சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னெஸ் காலமார்ட் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி தெற்காசிய பிராந்தியத்திற்கு விஜயம் செய்யும் அவர் இலங்கைக்கும் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூர்ந்து எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நிகழ்வில் அவர் கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் பின்னர் 24 ஆம் திகதி நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெறும் மாநாடு ஒன்றிலும் அவர் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin