இரட்டை கோபுர தாக்குதல் குறித்து 21 ஆண்டுகளாக தொடரும் மர்மம்!

உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டைக்கோபுர பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 21 ஆண்டுகள் கடந்துள்ளன.

2001 செப்டம்பர் 11 அன்று காலை சுமார் 8.45 மணிக்கு, அல் கொய்தா பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தின் மீது விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

பலரது உயிரை பலிகொண்ட இந்த கொடூர சம்பவத்துக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 2001 செப்டம்பர் 11 அன்று காலை பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தின் மீதும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் மீது விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நான்கு அமெரிக்க விமானங்கள் கடத்தல்
நான்கு அமெரிக்க விமானங்களை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த 19 பேர் கடத்தினார்கள். இரண்டு விமானங்கள் நியூயார்க் நகரத்தில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைக் கோபுரங்களின் மீதும், ஒரு விமானம் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க இராணுவத் தலைமையிடமான பென்டகன் மீதும் மோதியிருந்தன

நான்காவது விமானம் கட்டுப்பாடு இழந்து பென்சில்வேனியாவில் உள்ள வெட்டவெளியில் தரையில் மோதி வெடித்துச் சிதறியது. கிட்டத்தட்ட 3,000 பேர் வரை அதில் கொல்லப்பட்டதுடன், வர்த்தக மையத்தின் 110-அடுக்கு இரட்டைக் கோபுரங்கள் தகர்ந்து தரைமட்டமாகின.

21 ஆண்டுகளாக தொடரும் விசாரணை
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காலித் ஷேக் முகமது 21 ஆண்டுகள் கடந்தும், அவருக்கு இன்னும் தண்டணை வழங்கப்படவில்லை.

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள அவரது மறைவிடத்திலிருந்து மார்ச் 2003 இல் பிடிபட்டார். பின்னர் விசாரணைக்காக கியூபாவின் குவாண்டனாமோ விரிகுடாவிற்கு அனுப்பப்பட்டார். அன்றிலிருந்து கியூபாவின் குவாண்டனாமோ விரிகுடாவில் தங்கியிருக்கிறார்.

இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க உறுதி பூண்ட அமெரிக்கா அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு, ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் மீது போர் தொடுத்தது. அல்கொய்தா தலைவன் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor