இலங்கையின் பாரிய கடனை மறுசீரமைக்க உதவுமாறு அமெரிக்கா இன்று சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள யுஎஸ்எய்ட்டின் நிர்வாகி சமந்தா பவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களும், குறிப்பாக சீனா, வெளிப்படையாக இந்த செயல்பாட்டில் கூட்டாண்மை செய்ய வேண்டியது அவசியம்.
இலங்கையில் மிகத் தெளிவாகக் கடன் தாங்க முடியாததாக மாறும் போது, பாரிஸ் கிளப்பின் உறுப்பினர் என்ற வகையில், இலங்கையின் கடனை மறுசீரமைக்க அமெரிக்க அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று பவர் கூறினார்.
மோசமான நிதி நெருக்கடி
இதேவேளை இலங்கையில் இவ்வாறான கடன் அதிகரிப்புக்கு வழிவகுத்த பழக்கவழக்கங்களில் மாற்றம் தேவை என அவர் தெரிவித்துள்ளார்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமான நிதி நெருக்கடியுடன் நாடு போராடி வரும் நிலையில், இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இந்த ஆண்டு கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.
நாடு இப்போது வெளிநாட்டு கடனாளிகளுக்கு செலுத்த வேண்டிய 50 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான கடன்களை மறுகட்டமைக்க முயல்கிறது