விடுதலைப்புலிகளின் யுத்தத்தை ஹமாஸ் பாடமாக கொள்ளவேண்டும்: சர்வதேச ஊடகம் அறிவுரை
ஹமாஸ்(Hamas) அமைப்பானது தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு இடையிலான யுத்தத்தை பாடமாகக்கொண்டு பணயக்கைதிகளை விடுவித்து நேர்மையை காட்டும் வரையில் இஸ்ரேல்(Israel) நிராயுதப்பாணிகள் மீதான தாக்குதல்களை நிறுத்தாதென சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பலஸ்தீனத்தில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் யுத்தம் தொடர்ந்து வந்த நிலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும் இஸ்ரேல் தமது நடவடிக்கைகளை இன்னும் நிறுத்தவில்லை.முன்னதாக 2009 ஆம் ஆண்டு இலங்கைப்படையினர் சர்வதேச ஆதரவுடன் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திய நிலையில் இறுதியில் அதில் இறந்தவர்களில் 34 வீதமானோர் பொதுமக்களாக இருந்தனர்.
மனித உரிமை மீறல்கள்
எனினும் இதன்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேசத்தை கண்டு இலங்கை அரசாங்கம் பின்வாங்கவில்லை.
தற்போது ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் எகிப்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவது போன்று இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
A Hamas Organization Compared To The Ltte
எனினும் அவை தோல்விகண்ட நிலையில் இடையில் தலையீடு செய்ய சென்ற இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும்(Rajiv Gandhi) கொல்லப்பட்டார்.
இந்தநிலையில் 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் நோர்வேயின் ஏற்பாட்டில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அது முடிவுக்கு வந்தபோது தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க இலங்கை அரசு முடிவு செய்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளை
இதற்காக தமது தமது இராணுவத்தை இலங்கை மேம்படுத்தியதுடன் விடுதலைப் புலிகளை அதன் பிரபலமான தளத்திலிருந்து தனிமைப்படுத்தியது அத்துடன் போரினால் சோர்வடைந்த இலங்கையர்களை நம்ப வைத்தது.
பின்னர், விடுதலைப் புலிகளை வேட்டையாடுவது மற்றும் அவர்களின் தளங்களை ஒருமுகப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையின் மூலம் அழித்தது.
இதன்போது இந்திய மற்றும் அமெரிக்க உதவிகளும் கூட கிடைத்ததாக சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளதுடன் ஹமாஸ் அமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளின் தவறுகளில் இருந்து பாடம் கற்று அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதன் மூலம் தனது நேர்மையை வெளிப்படுத்தாத வரையில் இஸ்ரேல் நிராயுதபாணிகளை தாக்கும் கொடிய இலக்கிலிருந்து பின்வாங்காது.
மேலும் இந்த வன்முறை நிரந்தரமான முடிவாகவும் இருக்க முடியாது” என்று சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.