ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸை பதவி விலக வேண்டாம் என வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றுள்ளனர்.
நாடுமுழுவதிலும் உள்ள, ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை (28) மாட்ரிட்டில் உள்ள கட்சியின் தேசிய தலைமையகத்திற்கு வெளியே ஒன்று கூடினர்.
தான் பதவி விலகுவதாக சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான சான்செஸ் கடந்த புதன்கிழமை அறிவித்தார். இந்த அறிவிப்பு கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் சான்செஸின் மனைவியிடம் நீதிமன்றம் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்ததையடுத்து அவர் பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையிர் வடக்கு ஸ்பெயினில் உள்ள வல்லாடோலிடில் உள்ள அரச அதிகாரி ஒருவரும் பேரணியில் கலந்துக்கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.
மேலும், சான்செஸ் விலகினால் தீவிர வலதுசாரிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது குடும்பத்தை இலக்கு வைத்து இழிவுபடுத்துவதற்கான திட்டமிட்ட குற்றச்சாட்டு எனவும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செ பிரதமர் பொதுப் பணிகளையும் நிறுத்தியுள்ளதாக சர்வதுச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன