எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச விருப்பத்துடன் இருப்பதாக தெரியவருகிறது.
ஆனால், கட்சியின் தற்போதைய தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ இந்த தீர்மானத்தில் மகிழ்ச்சியடையவில்லை என்றும் அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிந்தது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னிடம் உறுதியளித்துள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறியதாகவும் பசில் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும், நாமல் ராஜபக்சவின் தரப்பினர் இன்னமும் ரணிலுக்கான ஆதரவை வெளியிடவில்லை. முழுமனதுடன், ரணிலை வேட்பாளராக இவர்கள் இன்னமும் ஏற்கவில்லை.
இதனால் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் வரை உத்தியோகபூர்வ ஆதரவை வெளியிடுவதில்லை என்ற முடிவை பொதுஜன பெரமுன எடுத்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டுமென அக்கட்சியின் சில உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், கட்சிக்கான மக்கள் செல்வாக்கு குறைந்துள்ளதால் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெற முடியாது என பசிலிடம் வலியுறுத்தியுள்ள அக்கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக நிறுத்தினால் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.